எவ்வாறு சுகாதாரமற்ற உணவு உடலைத் தாக்கும்? | How Unhealthy Foods Affect Your Body?

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள் - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
எவ்வாறு சுகாதாரமற்ற உணவு உடலைத் தாக்கும்? | How Unhealthy Foods Affect Your Body?

Image by Gerd Altmann from Pixabay

எவ்வாறு சுகாதாரமற்ற உணவு உடலைத் தாக்கும்?

இன்றைய துரிதமாக உள்ள உலகிற்கேற்றதை விட வேகமாக நாங்களும் ஓடி ஓடி உணவினை வாங்கி, நடந்து போகையிலே உணவினை உண்ணுவதே வாடிக்கையாகி விட்டது. அதுவே வசதியாகவும், எம்மைத் திருப்திபடுத்துவாகவும் இருப்பது ஒரு குறுகிய கால வசதிக்கு வாழ்கையிலே அதனால் ஏற்படுத்தப்போகும் பிற்காலத்தில் உருவாகவுள்ள தாக்கங்களை நாம் மறந்து விடுகின்றோம். இந்த உணவுகளாவன இனிப்பு நிறைந்தவைகளாகும், தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அதிகமாகவும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் செயற்கையான பொருட்களை நிறையவே கொண்டுள்ளன. இந்த வீடியோ பதிவினில் என்ன வகையான உணவுகள் எமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதனையும், மிகவும் சுருக்கமாக நல்லாரோக்கிய வாழ்விற்கு செய்யக் கூடியன வழிகளையும் விளக்குகின்றது.

ஆரோக்கியமற்ற உணவுகள், அநேகமாக இனிப்பு கூடியனவாகவும், ஆரோக்கியமற்ற கொழுப்புகளுள்ளவைகளாகவும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளனவாகவும் இருப்பதால் உடலினில் கணிசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான உணவுகளை வழக்கமாக உண்டுவந்தால், இவ் உணவுகள் கொண்டுள்ள அதிகளவான கலோரியினைக் கொண்டுள்ளதனால் உடலின் எடை அதிகரிக்கக் கூடும், அத்துடன் இவை ஊட்டச் சத்துக்களை மிகவும் குறைவாகக் கொண்டுள்ளதனாலும் உணவுண்டு சிறிது நேரத்தில் மீண்டும் பசியெடுக்கும் நிலைமையினை உருவாக்கும். எனவே, அடிக்கடி உண்ண வேண்டிய அவசியமாகின்றது. இதனால், உடலின் நிறை அதிகரிக்க இருதய வியாதிகளும், சலரோகமும், ஒரு சில புற்று நோய்களும் உருவாக அதிகம் வாய்ப்புகள் உண்டு.

சீனி அதிகமாகவுள்ள உணவுகள், பானங்கள், மிட்டாய்கள் இரத்தத்தில் சீக்கிரமாக சீனி அளவினைக் கூட்டும். இவை உடலிலுள்ள சக்தியில் குளப்பத்தினை உருவாக்கும். இவ்வாறு தொடர்ந்து சீனி உணவுகளை உண்ணுகையில் இரத்தத்தில் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்தும் நிணநீர் சுரப்பியினை சேதப்படுத்துவதனால், இன்சுலினின் வேகத்தினைக் குறைக்கும். இதனால், சலரோகத்தினை உருவாக்கும். அவ்வாறு, அதிக றான்ஸ் கொழுப்புகளையும், கெட்ட கொழுப்புகளையும் கொண்ட உணவுகளால், உதாரணமாக, பொரித்த தின்பண்டங்கள், பதப்படுத்திய இறைச்சிகள் கெட்ட கொலஸ்ரறோலினையும் அதிகரிப்பதுடன், நல்ல கொலஸ்ரறோலினைக் குறைப்பதனால் இருதய நாடிகளினுள் கொழுப்பு அடைப்பு மேலும், மேலும் படியத் தொடங்குகின்றது. இதனால், இருதய அடைப்பு நோய்களும், பாரிச வாதமும் உருவாக அதிகமான வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் என்னவகையான உணவுகளை உண்கிறீர்களோ அவற்றின் விளைவுகள் உடலில் பிரதிபலிக்கும். ஆரோக்கியமற்ற உணவானது ருசியாக இருப்பதனால் அவை பாதகமற்றவை போன்று தோன்றும். ஆனால், தொடர்ந்து இவ்வாறான உணவுகளை உண்டால் மிகவும் கொடூரமான அரோக்கிய நோய்களை உருவாக்குமாதலால் நீண்ட கால நோய்களையும், உடல் எடை அதிகரிப்பு, மன நோய்களுக்கான சவால்களை எதிர் நோக்க வேண்டிவரும். ஆனால், ஊட்டச் சத்து அதிகமாகவுள்ள உணவுகளை உண்ணத் தொடங்கினால் நீண்டகால சுகாதார வாழ்வினில் வாழலாம்.
எனவே, இவ்வாறு சுகாதாரமான நிறை உணவினை சிறிது சிறிதாகத்தன்னும் உண்ணத் தொடங்குங்கள் வருங்காலத்தில் அதன் பயனை மிக அதிகமாகக் காண்பீர்கள்.

How Unhealthy Foods Affect Your Body?

In today’s fast-paced world, unhealthy foods have become a common part of our diets. While they may be convenient and satisfying in the short term, their long-term effects on the body can be devastating. From sugary treats to greasy fast food, these items are often packed with empty calories, harmful fats, and artificial ingredients that do more harm than good. Understanding how unhealthy foods impact your body is crucial for making better dietary choices and protecting your overall health.

Unhealthy foods, often high in sugar, unhealthy fats, and refined carbohydrates, can have significant negative effects on your body. Consuming these foods regularly can lead to weight gain, as they are typically calorie-dense but lack essential nutrients, leaving you feeling hungry shortly after eating. This can contribute to obesity, which increases the risk of heart disease, type 2 diabetes, and certain cancers.

High-sugar foods, like sodas and candies, can cause spikes in blood sugar levels, leading to energy crashes and increased cravings. Over time, this can damage the pancreas and result in insulin resistance, a precursor to diabetes. Similarly, foods high in trans fats and saturated fats, such as fried snacks and processed meats, can raise bad cholesterol (LDL) and lower good cholesterol (HDL), contributing to plaque build up in the arteries and increasing the risk of heart disease and stroke.

Your body is a reflection of what you consume. While indulging in unhealthy foods occasionally might seem harmless, regular consumption can lead to serious health consequences, including chronic diseases, weight gain, and mental health challenges. The good news is that by making mindful choices and prioritizing nutrient-rich foods, you can break free from the cycle of unhealthy eating and set yourself on the path to long-term well-being. Remember, small changes in your diet today can make a big difference for your health tomorrow.

Choosing whole, nutrient-dense foods over processed options is essential for maintaining overall health and well-being.

வாழ்க வளமுடன் - Live prosperously